Tuesday, January 31, 2012

எங்கும் நிறைந்த ஏந்தல் நபிகள் (ஸல்)!!!

நாயகத்தின் திருப்பார்வை:

حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن أبى الزّناد عن الأعرج عن أبى هريرة أنّ رسول الله صلى الله عليه وسلم قال: (( هل ترون قبلتى هاهنا ؟ فوالله ما يخفى علىّ خشوعكم ولا ركوعكم ، إنّى لأراكم من وراء ظهرى )) بخارى - 418

அபூ ஹுரைராஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:நான் கிப்லா திசையில் மட்டும் பார்க்கின்றேன் என்று நீங்கள் கருதுகிறீர்களா? அல்லாஹ்வின் மீது ஆணையாக நீங்கள் அடக்கமாக இருப்பதும் உங்களின் ருகூவும் எனக்குத் தெரியாமல் இருப்பதில்லை. நிச்சயமாக என்னுடைய முதுகுக்குப் பின் புறம் உங்களை நான் பார்க்கிறேன். புஹாரி - 418.

குவைத் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் ரபீவுள் அவ்வள் பிறையை முன்னிட்டு நாயகம் (ஸல்) அவர்களின் சுப்ஹான மௌலிது ஷரீப் (பிறை 8) ஆத்ம சகோதரர் J.அன்வர் அலி ஹக்கிய்யுள் காதிரி இல்லத்தில் நடைபெற்றது.

நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.

Sunday, January 29, 2012

குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையின் சார்பாக கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் மாதமான ரபீவுள் அவ்வள் மாதம் முன்னிட்டு அவர்களின் சிறப்புகளை போற்றும் சுப்ஹான மௌலிது பிறை ஒன்று முதல் தினம் மாலை 8.00 மணிக்கு ஒரு மாதக்காலத்திற்கு சபையில் ஓதப்படுகிறது

நிக‌ழ்ச்சி முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்டுகிறது

Sunday, January 8, 2012

இராத்திபத்துல் காதிரிய்யா!!!
குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் ஜனவரி 6 வெள்ளிக்கிழமை மக்ஹ்ரிப் பிறகு பிறை 14 ராத்திபு மஜ்லிஸ் மற்றும் மாதந்திரக் கூட்டம் ஆத்ம சகோதரர் P.T.M. அப்துல் ஹமீது அவர்களின் இல்லத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு சபைத் தலைவர் ஆத்ம சகோதரர் மு.அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியின் ஆரம்பமாக கிராத் ஆத்ம சகோதரர் நத்ஹர்ஷா ஹக்கிய்யுள் காதிரி ஏகாந்தப் பாடல் - ஆத்ம சகோதரர் ஜாபர் அலி யாசினிய் மற்றும் ஆத்ம சகோதரர் முஹம்மது மீரான் ஹக்கிய்யுள் காதிரி வஹ்ததுல் வுஜூத் - ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி மற்றும் ஆத்ம சகோதரர் முபாரக் அலி ஹக்கிய்யுள் காதிரி. நபிப் புகழ்பா - ஆத்ம சகோதரர் ஆத்ம சகோதரர் மு.அப்துல் ஹமீது ஹக்கிய்யுள் காதிரி தலைமை உரை தலைவர் ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி அவர்கள். ஆத்ம சகோதரர் முஹம்மது மீரான் ஹக்கிய்யுள் காதிரி உரை ஆத்ம சகோதரர் முஹம்மது ஹக்கிய்யுள் காதிரி உரை இறுதியில் கலந்து கொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.