Sunday, January 23, 2011

இராத்திபத்துல் காதிரிய்யா


குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான மெய்ஞ்ஞானசபையில் ஜனவரி 21 வெள்ளிக்கிழமை மாலை மஃக்ரிபிற்குப் பின் ஸஃபர் மாத 14 பிறை ராத்திபு ஆத்ம சகோதரர் S.M.ஷபியுல்லாஹ் ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இஷா தொழுகைக்கு பின் மாதந்திரக் கூட்டம் நடைபெற்றது

தலைவர் முன்னிலையுடன், இந்த மாதக்கூட்டத்திற்கு பொதுச் செயலாளர் முஹம்மது M.C.A ஹக்கிய்யுள் காதிரி தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியின் ஆரம்பமாக ஆத்ம சகோதரர் தலைவர் மு.அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி கிராஅத் ஓதினார்.

நபிப்புகழ்பாவை ஆத்ம சகோதரர் ஜாஃபர் சாதிக் ஹக்கிய்யுள் காதிரி இனிமையாக பாடினார்.

வஹ்தத்துல் வுஜூது பாடலை ஆத்ம சகோதரர் தலைவர் மு.அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி மற்றும் ஆத்ம சகோதரர் மு.முபாரக் அலி ஹக்கிய்யுள் காதிரி பாடினார்கள்

பேச்சாளர்களின் முதலாவதாக ஆத்ம சகோதரர் ஜ.அப்துல் அஜுஸ் உலவி,ஹக்கிய்யுள் காதிரி பதுறு மவ்லிதின் சிறப்பைப் பற்றி உரையாற்றினார்.

அதைத் தொடர்ந்து ஜாபார் அலி யாசீனி ஹக்கியுல்காதிரி கொள்கை என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் .

இறுதியாக தலைவர் மு.அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் நன்றியுரை நல்கினார்.

தவ்பா பைத்துடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

இறுதியில் கலந்து கொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.