Wednesday, February 23, 2011

வெலிகமையில் வேந்தர்நபிகளின் உதயதினவிழா - 20/02/2011


இலங்கை வெலிகமையில் 20/02/2011 ஞாயிறு அன்று காலை 9.00 மணிக்கு அத்தரீகத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யாவின் ஏற்பாட்டில் சங்கைமிகு ஷெய்குநாயகம் ஜமாலிய்யா அஸ்ஸெய்யிது கலீல் அவுன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹாஸிமிய் அவர்களின் தலைமையில் 52 புஹாரி மஜ்ஸித் மாவத்தை வெலிகமையில் உள்ள பைத்துல்பரக்கா இல்லத்தில் குத்துபுகள் திலகம் யாசீன் மௌலானா(ரலி) அவர்களின் அரங்கில் கண்மணிநாயகம் (ஸல் அலை) அவர்களின் உதயதின விழா சிறப்பாக நடைப்பெற்றது.

இவ்விழாவிற்கு அறிஞர் பெருமக்கள் உலமாக்கள் ஆன்மீக சகோதரர்கள் வெலிகமை நகர மக்கள் மற்றும் இலங்கை இந்தியா துபாய் கத்தார் குவைத் சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளிலிருந்தும் பலரும் இவ்விழாவில் கலந்துக் கொண்டனர்.

இவ்விழாவை slbc.lk இலங்கை தென்றல் வானொலியில் காலை 9.00 மணிமுதல் மாலை 8.00 மணிவரை அஞ்சல் செய்யப்பட்டன.