Sunday, February 6, 2011

கண்மணி நாயகத்தின் கனிவான மாதம்



குவைத் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் ரபீவுள் அவ்வள் பிறையை முன்னிட்டு நாயகம் (ஸல்) அவர்களின் மௌலிது ஷரீப் மிகச் சிறப்பாக ஓதப்பட்டு வருகின்றது, பிறை 1 மற்றும் பிறை 2 அன்று ஆத்ம சகோதரர் முஹம்மது ஹாஸிம் அவர்களின் இல்லத்திலும், பிறை 3 அன்று PTM அப்துல் ஹமீது அவர்களின் சார்பாக ஆத்ம சகோதரர்கள் முபாரக் அலி, நத்ஹர்ஷா மற்றும் முஹம்மது மீரான் அவர்களின் இல்லத்திலும் நடைபெற்றது.

நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.

தினமும் ஒரு ஹதீஸ்:

அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்கள்,

நபி (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ‌ஒருபோதும் குறை கூறியதில்லை. அவர்கள் ஓர் உணவை விரும்பினால் உண்பார்கள் இல்லையென்றால் விட்டுவிடுவார்கள். (புகாரி-3563)