Monday, February 7, 2011

கண்மணி நாயகத்தின் கனிவான மாதம்

தினமும் ஒரு ஹதீஸ்:

ஜுபைர் இப்னு முத்யிம் (ரலி) அறிவித்தார்கள், இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன. நான் முஹம்மத் - புகழப்பட்டவர் ஆவேன், நான் அஹ்மத் - இறைவனை அதிகம் புகழ்பவராவேன், நான் மாஹு - அழிப்பவர் ஆவேன் (என் மூலமாக இறைவன் இறைமறுப்பை அழிக்கிறான்), நான் ஹாஷிர் - ஒன்று திரட்டுபவராவேன் (மக்கள் எனக்குப் பின்னால் ஒன்றுதிரட்டப்படுவார்கள்), நான் ஆம்ப் - (இறைத்தூதர்களில்)இறுதியானவராவேன். (புஹாரி - 3532).

குவைத் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் ரபீவுள் அவ்வள் பிறையை முன்னிட்டு நாயகம் (ஸல்) அவர்களின் சுப்ஹான மௌலிது ஷரீப் பிறை 4 ஆத்ம சகோதரர்கள் முபாரக் அலி, நத்ஹர்ஷா மற்றும் முஹம்மது மீரான் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.