Thursday, March 3, 2011

மணம் வீசும் மாநபி!!!

ஹதீஸ்:

عن جابر بن سمرة رضى الله عنه قال: صليتُ مع رسول الله صلى الله عليه وسلم صلاة الأولى، ثم خرج الى اهله وخرجتُ معه، فاستقبله ولدان، فجعل يمسح خدّى أحدهم واحدا واحدا، قال: وأما أنا فمسح خدّى، قال: فوجدتُ ليديه برداً – أو : ريحاً – كأنما أخرجها من جؤنة عطار. مسلم

ஜாபிர் இப்னு சமுரா (ரலி) அறிவித்தார்கள், நான் நாயகம் (ஸல்) அவர்களுடன் முதல் தொழுகையை தொழுதேன், பிறகு அவர்கள் தங்களின் குடும்பத்தாரை (வீட்டை) நோக்கிச் சென்றார்கள் நானும் அவர்களுடன் சென்றேன். (செல்லும் வழியில்) இரண்டு சிறுவர்களைக் கண்டார்கள் மேலும் அச்சிறுவர்களின் கன்னங்களை தங்களின் திருக்கரம் கொண்டு ஒருவர் பின் ஒருவராக தடவினார்கள். அச்சிறுவன் கூறினான்: இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் கன்னத்தைத் தடவும் பொழுது நபியவர்களின் திருக்கரங்களை குளிர்ச்சியானதாகவும் - நறுமணம் வீசக் கூடியதாகவும் பெற்றுக் கொண்டேன். (அதாவது அவர்கள் கைகள் இரண்டும் வாசனைத் திரவியப் பாத்திரத்தில் இருந்து அப்பொழுதுதான் வெளியில் எடுத்ததைப் போன்று இருந்தது). முஸ்லிம்

குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையின் சார்பாக கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் மாதமான ரபீவுள் அவ்வள் பிறை-28 முன்னிட்டு அவர்களின் சிறப்புகளை போற்றும் சுப்ஹான மௌலிது ஷரீப் ஆத்ம சகோதரர் பெரம்பலூர் அமானுல்லா மற்றும் சில ஆத்ம சகோதரர்கள் சார்பாக ஆத்ம சகோதரர் முஹம்மது ஹாஷிம் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.

நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.