المقالة الأولى:
قـال رضـي الله تـعـالى عـنـه و أرضـاه : لا بد لكل مؤمن في سائر أحواله من ثلاثة أشياء : أمر يمتثله، ونهي يجتنبه، وقدر يرضى به، فأقل حالة المؤمن لا يخلو فيها من أحد هذه الأشياء الثلاثة، فينبغي له أن يلزم همها قلبه، وليحدث بها نفسه، ويؤاخذ الجوارح بها في سائر أحواله.
உபதேசம் ஒன்று:
மெய் விஸ்வாசம் கொண்டவனுக்கு வாழ்க்கையின் சகல நிலைமைகளிலும் மூன்று விஷயங்கள் இன்றியமையாதவை, அவை அல்லாஹ்வின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதும், விலக்கப்பட்டவற்றை விலக்கலும், இறைவன் திருச் சித்தத்தை மனமுவந்து ஏற்பதும் ஆகும். குறைந்த பட்சம் மெய் விஸ்வாசி இம்மூன்று விடயத்திளுமாவது ஒழுங்காய் இருந்து வர வேண்டும். ஆகையால், அவன் இவற்றுக்காகவே மனதைத் தயாராக்கி, இவை பற்றியே தன்னுள் பேசி, தன அங்கங்களை இவற்றிலேயே ஈடுபடுத்தியவனாய் இருப்பதே பொருத்தமாகும்.
நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.