المقالة:
قـال رضـي الله تـعـالى عـنـه و أرضـاه : إذا نصرت الله في مخالفة نفسك وهواك بترك الاعتراض عليه والسخط بفعله فيك وكنت خصماً لله على نفسك سيافاً عليها كلما تحركت بكفرها وشركها حززت رأسها بصبرك وموافقتك لربّك والطمأنينة إلى فعله ووعده والرضا بهما كان عزَّ وجلَّ لك معينا.
உபதேசம்:
அப்துல் காதிர் ஜீலானி (ரலி) கூறினார்கள்:உன் கீழான உணர்ச்சிகளை எதிர்த்துச் சாடி, அவனைப் பற்றிக் குறை கூறுவதைக் கைவிட்டு, உன் விஷயத்தில் அவன் செய்வது பற்றி அதிருப்தி அடையாமல், அல்லாஹ்வுக்காக உன் கீழான மனதுக்கே நீ பகைவனாகி, அது தெய்வநிந்தனை செய்யவோ, இணைவைக்கவோ தலை தூக்குகையில் உன் வாளால் அதை வெட்ட ஆயத்தமாயிருந்து, உன்பொறுமையாலும், மனப் பொருத்தத்தாலும் அதன் தலையைத் துண்டித்து அவன் செயலிலும், வாக்குறுதியிலும் பூரணத் திருப்தி கொண்டவனாய் இருந்து வந்தால் அல்லாஹ் உன் உதவியாளனாவான்.
நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.