Tuesday, March 8, 2011

முஹிய்யுத்தீன் மவ்லிது!!!

المقالة:

قـال رضـي الله تـعـالى عـنـه و أرضـاه : يـا ولــي عـلـيـك بذكر الله في كل حال فإنه للخير جامع. و عليك بالاعتصام بحبل الله فإنه للمضار دافع و عليك بالتأهب لتلقى موارد القضاء فإنه واقع

உபதேசம்:

அப்துல் காதிர் ஜீலானி (ரலி) கூறினார்கள்: ஓ! இறை நேசரே, எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வை நினைவு கூர்வது உம்மீது கடமையாகியுள்ளது; அது சகல நல்லவற்றையும் ஒன்றாகித் தருகிறது. அல்லாஹ்வின் உடன்படிக்கைக்கு ஏற்ப நடப்பதும் உன் மீது கடமையாகும்; அதனால் சகல தீமைகளும் விலகிவிடும். அல்லாஹ்வின் கட்டளைப்படி நிகழும் அனைத்து சம்பவங்களையும் ஏற்று சமாளிக்கத் தயாராய் இருப்பதும் உன் மீது கடமையாகும், அதுவே உண்மையாகும்.

குதுபு நாயகம் அவர்கள் மீது இயற்றப் பட்ட முஹிய்யுத்தீன் மவ்லிது ஷரீப் (பிறை 3) ஆத்ம சகோதரர் முஹம்மது ஹாஷிம் அவர்களின் இல்லத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.