Thursday, March 10, 2011

முஹிய்யுத்தீன் மவ்லிது!!!

المقالة:

قـال رضـي الله تـعـالى عـنـه و أرضـاه : تطلبنّ من الله شيئاً سوى المغفرة للذنوب السابقة و العصمة منها في الأيام الآتية اللاحقة، و التوفيق لحُسن الطاعة، و امتثال الأمر و الرضا بمر القضاء، و الصبر على شدائد البلاء، و الشكر على جزيل النعماء و العطاء، ثم الوفاة بخاتمة الخير، و اللحوق بالأنبياء و الصديقين و الشهداء و الصالحين و حسن أولئك رفيقاً و لا تطلب منه الدنيا و لا كشف الفقر و البلاء إلى الغناء و العافية، بل الرضا بما قسم و دبر.

உபதேசம்:

அப்துல் காதிர் ஜீலானி (ரலி) கூறினார்கள்: கடந்த காலப் பாவங்களின் மன்னிப்பையும், நிகழ்கால வருங் காலப் பாவங்களிலிருந்து பாதுகாப்பையும், நல்ல முறையில் அவனுக்குக் கீழ்ப்படியவும், கட்டளைகளை நிறைவேற்றவும், விலக்கப்பட்டவற்றை ஒதுக்கவும், விதிவசத்தின் கசப்புக் குறித்து மனப் பொருத்தங்காட்டவும், துயரங்களின் கடுமையின்முன் பொறுமையுடன் இருக்கவும், பெருத்த செல்வங்களும், நன்கொடைகளும் இருக்கையில் நன்றி செலுத்தவும், கடைசியாக நல் மரணமடைந்து நபிமார்கள், ஸித்தீகீன்கள், ஷுஹதாக்களின் கூட்டத்தில் சேரவும் சக்தியை இரப்பதையன்றி அல்லாஹ்விடம் வேறு எதையும் கேட்காதே! வறுமையையும் துயரத்தையும் அகற்றவேண்டும் என்றோ, செல்வம் பெருகிச் சுகமுண்டாகவேண்டும் என்றோ கேளாதே; அவன் ஒதுக்கியுள்ளது குறித்து மகிழ்ச்சியடையும் மனப்பாங்கைக் கேள்.

குதுபு நாயகம் அவர்கள் மீது இயற்றப் பட்ட முஹிய்யுத்தீன் மவ்லிது ஷரீப் (பிறை 4) ஆத்ம சகோதரர் முஹம்மது ஹாஷிம் அவர்களின் இல்லத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.