Thursday, March 10, 2011

முஹிய்யுத்தீன் மவ்லிது!!!

المقالة:

قـال رضـي الله تـعـالى عـنـه و أرضـاه : لا تختر جلب النعماء ولا دفع البلوى، فالنعماء واصلة إليك إن كانت قسمك استجلبتها أو كرهتها, والبلوى حالَّةٌ بك إن كانت قسمك مقضية عليك سواء كرهتها أو رفعتها بالدعاء أو صبرت وتجلدت لرضى المولى.

உபதேசம்:

அப்துல் காதிர் ஜீலானி (ரலி) கூறினார்கள்: எந்தப் பாக்கியத்தையும் நீயாகக் கைப்பற்றிக் கொள்ளவோ, எந்தத் துயரையும் ஒதுக்கிக் கொள்ளவோ எம்முயர்ச்சியும் செய்ய வேண்டாம். பாக்கியம் உனக்கு விதிப்பில் இருப்பின், நீ அதனைத் தேடினாலும் தேடாவிட்டாலும் அது உன்னை வந்தடையும். நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் துயரம் விதிக்கப்பட்டிருப்பின், அதுவும் உன்னை வந்தடையவே செய்யும். உன் தொழுகை மூலமோ உன் சகிப்புத் தன்மை, பொறுமை ஆகியவற்றாலோ அதை ஏற்று, உன் இரட்சகனின் பொருத்தத்தை அடைய முயற்சி செய்.

குதுபு நாயகம் அவர்கள் மீது இயற்றப் பட்ட முஹிய்யுத்தீன் மவ்லிது ஷரீப் (பிறை 5) ஆத்ம சகோதரர் முஹம்மது ஹாஷிம் அவர்களின் இல்லத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.