Friday, March 11, 2011

முஹிய்யுத்தீன் மவ்லிது!!!

المقالة:

قـال رضـي الله تـعـالى عـنـه و أرضـاه : أتق الشرك جداً ولا تقربه، واجتنبه في حركاتك وسكناتك وليلك ونهارك، في خلوتك وجلوتك. وأحذر المعصية في الجملة في الجوارح والقلب واترك الإثم ما ظهر منه وما بطن. لا تهرب منه عزَّ وجلَّ فيدركك، ولا تنازعه في قضائه فيقصمك، وتتهمه في حكمه فيخذلك.

உபதேசம்:

அப்துல் காதிர் ஜீலானி (ரலி) கூறினார்கள்: உன் சக்திக்கு இயன்றவரை அல்லாஹ்வோடு எதையும் இணைவைப்பதிலிருந்தும் விலகிக்கொள். அந்தப் பாவத்தருகேயே நெருங்காதே! உன் நடவடிக்கை யாவற்றிலும், ஆஸ்வாச நிலையிலும், இரவிலும் பகலிலும், தனிமையிலும், பலமுடனிருக்கையிலும் இணைவைத்தல் உன்னை அணுகாதபடி காத்துக்கொள். உன் உடலின் சகல அங்கங்களிலும் உன் இதயத்திலும் பாவம் ஏற இடங்கொடாது எச்சரிக்கையுடன் இருந்துகொள். வெளிரங்கமான, மறைவான பாவம் எதுவுமே உன்னை நெருங்காதபடி பாதுகாத்துகொள். அல்லாஹ்வை விட்டும் ஓடாதே! அவன் உன்னை எட்டிப் பிடித்துவிடுவான். அவன் உத்தரவுகளில் அவனோடு வாதிக்காதே! அப்படி வாதித்தால் அவன் உன்னை நசுக்கிவிடுவான். அவன் உத்தரவுகளுக்காக அவன் மீது குறை கூறாதே! அப்படிக் கூறினால் அவன் உன்னை இழிவுபடுத்துவான்.

குதுபு நாயகம் அவர்கள் மீது இயற்றப் பட்ட முஹிய்யுத்தீன் மவ்லிது ஷரீப் (பிறை 6) ஆத்ம சகோதரர் முஹம்மது ஹாஷிம் அவர்களின் இல்லத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.