Wednesday, February 9, 2011

கண்மணி நாயகத்தின் கனிவான மாதம்

தினமும் ஒரு ஹதீஸ்:

عن بن عمر (رضى) قال : كان النبيّ صلّى الله عليه وسلّم يخطب إلى جذع ، فلمّا إتخذ المنبر تحوّل إليه ، فحنّ الجذع ، فأتاه فمسح يده عليه – بخارى 3583

இப்னு உமர் (ரலி) அறிவித்தார்கள்,

நபி (ஸல்) அவர்கள் (பள்ளி வாசலில் தூணாக இருந்த) ஒரு பேரீச்ச மரத்தின் அடிப்பகுதியின் மீது சாய்ந்தபடி உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் (மிம்பர்) உரைமேடையை அமைத்த பின்னால் அதற்கு மாறிவிட்டார்கள். எனவே, (நபி (ஸல்) அவர்கள் தன்னைப் பயன்படுத்தாததால் வருத்தப்பட்டு) அந்த மரம் ஏக்கத்துடன் முனகியது. உடனே, நபி (ஸல்) அவர்கள் அதனிடம் சென்று (அதை அமைதிப்படுத்துவதற்காக) அதன் மீது தன் கையை வைத்து (பரிவுடன்) வருடிக் கொடுத்தார்கள். (புகாரி - 3583)



குவைத் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் ரபீவுள் அவ்வள் பிறையை முன்னிட்டு நாயகம் (ஸல்) அவர்களின் சுப்ஹான மௌலிது ஷரீப் (பிறை 6) ஆத்ம சகோதரர முஹம்மது ஹாஷிம் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.



நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.