கண்மணி நாயகத்தின் கனிவான மாதம்
இன்றைய தினம்:
பன்னி ரண்டு நாளிதே
பதிபி றந்த நாளிதே
மன்னு யிர்க ளுக்கெலாம்
மதிபி றந்த நாளிதே.
பொருள் விளக்கம்:
பன்னிரண்டாம் பிறையினில் அரசர் கோமான் எம்பிரான் அகில நாதர் உலகினில் திருவவதாரஞ் செய்தருளினார்கள். உலகத்தில் நிலை பெற்றிருக்கும் உயிர்களுக்கெல்லாம் அற்றைத்தினம் அறிவு - புத்தி - ஞானம் பிறந்த நாளாகும். மண்ணுயிர் எனப் பாடபேதங்கொளின் மண்ணிலே வதியும் அண்டசராசரங்கள் அனைத்துக்கும் அறிவு, புத்தி பிறந்த நாள் எனக்கொளின் மிகையன்று.
பதிபிறந்தநாள் என்பதனை அரசர் பிறந்த நாள் எனவும் ஒளியும் பிறந்த நாளெனவும் சொள்ளற் பொருந்தும். ஏன் எனில் நபிகணாதரின் திருவதனம் மதிபோன்ற தெனச் செப்பிய அருள் வாக்கியங்கள் "ஸஹீஹுல் புகாரி" எனும் பெருநூலில் காணக்கிடைப்பன கண்கூடு.

நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.