Saturday, February 12, 2011

கண்மணி நாயகத்தின் கனிவான மாதம்

இன்றைய தினம்:

வஞ்ச கர்கள் கூடிய

மக்க மாந கர்தனிற்

கஞ்சஞ் சேற்ற லர்ந்ததாய்க்

கதிபி றந்த நாளிதே.


பொருள் விளக்கம்:

வஞ்சகர்கள் கூட்டம் கூட்டமாகக் கூடியிருந்த அம்மக்கமா நகர்தனில் சேற்றிற் செந்தாமரை அலர்ந்தார்ர் போல் அனைவருக்கும் அனைத்திற்கும் கதியாகிய எம்பெருமானார் பிறந்தநாள் இதே. கதி : பாவிகள் தங்கள் பாபங்களை நீக்கி விமோசனம் அடைதற்குச் செல்லும் புகலிடம். எம்பெருமானாரே எல்லாவற்றிற்கும் கதி.

- ஜமாலிய்யா அஸ்சையித் கலீல் அவ்ன் அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் மௌலானா

குவைத் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் ரபீவுள் அவ்வள் பிறையை முன்னிட்டு நாயகம் (ஸல்) அவர்களின் சுப்ஹான மௌலிது ஷரீப் (பிறை 9) ஆத்ம சகோதரர P.T.M. அப்துல் ஹமீது அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.

நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.