المقالة:
قـال رضـي الله تـعـالى عـنـه و أرضـاه : إذا أعطاك الله عزَّ وجلَّ مالاً فاشتغلت به عن طاعته حجبك به عنه دنيا وأخرى, وربما سلبك إياه وغيرك وأفقرك لاشتغالك بالنعمة عن المنعم, وإن اشتغلت بطاعته عن المال جعله موهبة ولم ينقص منه حبة واحدة وكان المال خادمك وأنت خادم المولى, فتعيش في الدنيا مدللاً وفي العقبى مكرماً مطيباً في جنة المأوى مع الصديقين والشهداء والصالحين.
உபதேசம்:
அப்துல் காதிர் ஜீலானி (ரலி) கூறினார்கள்: அல்லாஹுத் தஆலா உனக்குச் செல்வத்தைத் தந்ததும், நீ அதனால் அவனுக்குப் பணிவதிலிருந்தும் கவனம் திருப்பப்பட்டவனானால், அது காரணமாக இம்மை மறுமை இரண்டிலுமே அவனை நீ காண முடியாதவாறு உன் முன் திரையை இட்டு விடுகிறான். உனக்குச் சன்மானம் தந்தவனிடம் நன்றி காட்டாது, தரப்பட்ட பொருளின் கவனத்திலேயே நீ மூழ்கிக் கிடைப்பதற்குத் தண்டனையாக, அவன் உனக்குத் தந்த சம்மானங்களை பறித்து, உன் நிலையையே மாற்றி, உன்னைத் தரித்திரனாக்குவதும் அவன் செய்யக்கூடிய காரியந்தான். ஆனால், நீ அவனுக்குப் பணிவதில் ஈடுபட்டு அச்செல்வத்தைப் பற்றிய அக்கரையற்றவனாய் இருப்பின், அதை அல்லாஹ் உனக்கு ஏகபோகமாக விட்டு விடுவதுடன், ஓர் அணுக்கூட அதில் குறைவு வரவும் இடந்தர மாட்டான். செல்வம் உன் அடிமை; நீ உன் ரட்சகனின் அடிமை. எனவே, இவ்வுலகில் அவனுடைய அன்புப் பாதுகாவலிலும், மறுமையில் கவுரவத்தோடும், சுகத்தோடும், நிரந்தரமான சொர்க்கத்திலும், ஸித்தீகீன்கள், ஷுஹதாக்கள், ஸாலிஹீன்களுடைய கூட்டத்தில் நீ வாழ வேண்டும்.
Thursday, March 17, 2011
முஹிய்யுத்தீன் ஆண்டகையின் உபதேசம்!!!