குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில் செப்டம்பர் 24 வெள்ளிக்கிழமை மாலை மக்ஹ்ரிப் பிறகு இராத்திபத்துல் காதிரியா ஆத்ம சகோதரர் P.T.M.அப்துல் ஹமீது ஹக்கியுல்காதிரி அவர்கள் இல்லத்தில் ஓதப்பட்டது.
அதை தொடர்ந்து சங்கைமிகு குத்புஜ் ஜமான் ஷம்சுல் வுஜுத் அஷ்ஷெய்கு ஜமாலிய்யா ஸய்யித் கலீல் அவ்ன் மௌலானா அல் காதிரிய்யுல் ஹஸனிய்யுல் ஹுசைனிய்யுல் ஹாஷிமிய் மௌலானா நாயகம் அவர்களின் எழில்மிகு 75வது உதயதின விழா ஆரம்பமானது. நிர்வாகத்தலைவர் அப்துல் ஹமீது பாகவி ஹக்கியுல்காதிரி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின் ஆரம்பமாக முபாரக் அலி ஹக்கியுல்காதிரி அவர்கள் கிராஅத் ஓதி துவங்கினார்கள்.
அவர்களைத் தொடந்து வஹ்தத்துல் வுஜூதுபாடலை ஜபார் அலி யாசீனி ஹக்கியுல்காதிரி பாடினார்.
கண்மணி நாயகம் (ஸல் அலை) புகழ்பாடலை முபாரக் அலி ஹக்கியுல்காதிரி அவர்கள் மற்றும் ஞானப்பாடலை ஆத்ம சகோதரர் Er.ஹிதயாத்துலாஹ் பாடினார்கள்.
விழாத்தலைவர் தலைமை உரை நிகழ்த்தினார்
அதைத் தொடந்து ஆத்ம சகோதரர் மீரான் ஹக்கியுல்காதிரி மிக அழகாக உரையாடினார்கள்
ஜாபர் அலி யாசீனி ஹக்கியுல்காதிரி அவர்கள் முடிவுரை நிகழ்த்தினார்கள்.
அதன் பிறுகு கஸிதத்துல் அவ்னியா ஓதப்பட்டது
இறுதியாக விழாத்தலைவர் நன்றி உரை நல்கினார்.
இவ்விழாவில் சபை உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து சிறப்பித்தார்கள். நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன .