Sunday, February 19, 2012

கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் உதயதின விழா
குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் சுப்ஹான மௌலிது ஷரீப் ஓதப்பட்டு மக்ஹ்ரிப் பின் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் உதயதின விழா 17/2/2012 ஆத்ம சகோதரர் G.சபியுல்லாஹ் ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் ஆரம்பமாக கிராத் - ஆத்ம சகோதரர் முபாரக் அலி ஹக்கிய்யுள் காதிரி ஏகாந்தப் பாடல் - ஆத்ம சகோதரர் ஜாபர் சாதிக் ஹக்கிய்யுள் காதிரி மற்றும் ஆத்ம சகோதரர் முஹம்மது மீரான் ஹக்கிய்யுள் காதிரி வஹ்ததுல் வுஜூத் - ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி நபிப் புகழ்பா - ஆத்ம சகோதரர் முபாரக் அலி ஹக்கிய்யுள் காதிரி தலைமை உரை தலைவர் ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி அவர்கள். ஆத்ம சகோதரர் முஹம்மது ஹக்கிய்யுள் காதிரி உரை ஆத்ம சகோதரர் G. சம்சுதீன் ஹக்கிய்யுள் காதிரி உரை ஆத்ம சகோதரர் S.M. ஷஃபியுல்லாஹ் ஹக்கிய்யுள் காதிரி உரை ஆத்ம சகோதரர் முஹம்மது ஜமால் ஹக்கிய்யுள் காதிரி உரை ஆத்ம சகோதரர் P.T.M.அப்துல் ஹமீது ஹக்கிய்யுள் காதிரி உரை ஆத்ம சகோதரர் முஹம்மது ஹாஷிம் ஹக்கிய்யுள் காதிரி உரை நபிப் புகழ்பா - ஆத்ம சகோதரர் முஹம்மது உமர் மற்றும் ஆயிஷா ஸித்திக்கா ஆத்ம சகோதரர் முஹம்மது மீரான் ஹக்கிய்யுள் காதிரி உரை நன்றி உரை ஆத்ம சகோதரர் Er.ஹிதாயத்துல்லாஹ் ஹக்கிய்யுள் காதிரி இறுதியில் கலந்து கொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது

Sunday, February 12, 2012



குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் ராத்திபு மஜ்லிஸ் மற்றும் நாயகம் (ஸல்) அவர்களின் சுப்ஹான மௌலிது ஷரீப் ஆத்ம சகோதரர் முஹம்மது அவர்களின் இல்லத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.



இறுதியில் கலந்து கொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.

Wednesday, February 1, 2012

எங்கும் நிறைந்த ஏந்தல் நபிகள் (ஸல்)!!!

நாயகத்தின் திருக்கரங்கள்:

عن جابر بن عبد الله رضى الله عنهما قال (( عطش النّاس يوم الحديبية والنّبيّ صلى الله عليه وسلم بين يديه ركوة ، فتوضأ فجهش النّاس نحوه فقال: مالكم؟ قالوا : ليس عندنا ماء نتوضأ، ولا نشرب الا ما بين يديك. فوضع يده فى الركوة، فجعل الماء يثور بين أصابعه كأمثال العيون. فشربنا وتوضأنا)). قلت : كم كنتم ؟ قال : لو كنا مائة ألف لكفانا، كنا خمس عشرة مائة. بخارى - 3576

ஜாபிர் இப்ன் அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ஹுதைபிய்யா உடன்படிக்கையின்போது மக்களுக்குத் தாகம் ஏற்பட்டது. அப்போது நபிகள் (ஸல்) அவர்களுக்கு முன்னால் தோல் குவளை ஒன்று இருந்தது. (அதிலிருந்து) நபி (ஸல்) அவர்கள் ஒளுச் செய்தார்கள். மக்கள் நபிகள் நாயகத்தை நோக்கி ஓடி வந்தார்கள். நபிகள் கோமான் (ஸல்) "உங்களுக்கு என்ன ஆகிவிட்டது?" என்று வினவினார்கள். அதற்க்கு மக்கள் " தங்கள் முன்னால் உள்ள தண்ணீரைத் தவிர நாங்கள் உளுச் செய்வதற்கும் குடிப்பதற்கும் வேறு தண்ணீர் எங்களிடம் இல்லை என்றார்கள்." உடனே நபிகள் பெருமானார் (ஸல்) தங்களது திருக்கரத்தினை தோல் குவளையினுள் வைத்தார்கள். உடனே அவர்களுடைய விரல்களுக்கு இடையிலிருந்து ஊற்றுகளைப்போன்று தண்ணீர் பொங்கி வரத் துவங்கியது. நாங்கள் அதிலிருந்து அருந்தினோம் ஒளுச் செய்தோம். நீங்கள் எத்தனை பேர் இருந்தீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள்: நாங்கள் ஒரு லட்சம் பேர் இருந்திருந்தாலும் கூட அது எங்களுக்குப் போதுமானதாக இருந்திருக்கும். நாங்கள் ஆயிரத்து ஐந்நூறு பேர்தான் இருந்தோம் என்று பதிலளித்தார்கள். புஹாரி - 3576.

குவைத் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் ரபீவுள் அவ்வள் பிறையை முன்னிட்டு நாயகம் (ஸல்) அவர்களின் சுப்ஹான மௌலிது ஷரீப் (பிறை 9) ஆத்ம சகோதரர் பெரம்பலூர் அமானுல்லாஹ் ஹக்கிய்யுள் காதிரி இல்லத்தில் நடைபெற்றது.

நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.