Saturday, October 30, 2010



சங்கைமிகு யாசீன்மௌலானா (ரலி)அவர்களின் விசால்தினம்

குவைத் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் வெள்ளிக்கிழமை(29.10.2010) மஃரிப் தொழுகைக்குப் பின் குத்புல் அக்தாப் ஜமாலிய்யா சைய்யது யாஸீன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்களின் புனித விசால் தினத்தில் கசிதா ஓதியபின் கந்தூரிவிழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.

நிர்வாகத்தலைவர் அப்துல் ஹமீது(பாகவி)ஹக்கியுல்காதிரி தலைமை தாங்கினார் நிகழ்ச்சியின் ஆரம்பமாக முபாரக் அலி ஹக்கியுல்காதிரி அவர்கள் கிராஅத் ஓதி துவங்கினார்கள் அவர்களைத் தொடர்ந்து வஹ்தத்துல் வுஜூதுபாடலை ஆத்ம சகோதரர் மீரான் ஹக்கியுல்காதிரி மற்றும் அப்துல் ஹமீது(பாகவி) ஹக்கியுல்காதிரி பாடினார்கள் கண்மணி நாயகம் (ஸல் அலை) புகழ்பாடலை முபாரக் அலி ஹக்கியுல்காதிரி அவர்கள் மற்றும் ஞானப்பாடலை ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது(பாகவி),ஆத்ம சகோதரர் Er.ஹிதாயத்துல்லாஹ் , ஆத்ம சகோதரர் முஹம்மது MCA பாடினார்கள்.

அதைத் தொடர்ந்து ஆத்ம சகோதரர் முஹம்மது MCA மற்றும் ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது(பாகவி) உரையாற்றினார்கள், இவ்விழா ஆத்ம சகோதரர் P.T.M.அப்துல் ஹமீது ஹக்கியுல்காதிரி அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது

இவ்விழாவில் சபை உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து சிறப்பித்தார்கள். நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன .

Sunday, October 24, 2010

இராத்திபத்துல் காதிரிய்யா

குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் ஜமாதுல் அவ்வல் பிறை 14 ராத்திப் வெள்ளி மஃரிப் தொழுகைக்குப் பின் இராத்திபத்துல் காதிரியா ஓதப்பட்டது அதன் பின் குத்புல் அக்தாப் ஜமாலிய்யா சைய்யது யாஸீன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்களின் விசால் தினத்தினை நினைவு கூறும்பொருட்டு அவர்களுக்காக கசீதாவும் ஒதப்பட்டது. இந்நிகழ்ச்சி ஆத்ம சகோதரர் Er.ஹிதாயத் இல்லத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது,நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன