குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில் நவம்பர் 19 வெள்ளிக்கிழமை மாலை மஃக்ரிபிற்குப் பின் பிறை 14 இராத்திபு ஆத்ம சகோதரர் முபாரக் அலி, நத்ஹர்ஷா மற்றும் முகம்மது மீரான் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. முகம்மது மீரான் ஹக்கியுல்காதிரி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின் ஆரம்பமாக ஷம்சுத்தீன் ஹக்கியுல்காதிரி அவர்கள் கிராஅத் ஓதி துவங்கினார்கள். அவர்களைத் தொடர்ந்து வஹ்தத்துல் வுஜூதுபாடலை அப்துல் ஹமீது ஹக்கியுல்காதிரி (பாகவி) மற்றும் முபாரக் அலி ஹக்கியுல்காதிரி பாடினார்கள். கண்மணி நாயகம் (ஸல் அலை) புகழ்பாடலை அமானுல்லாஹ் ஹக்கியுல்காதிரி அவர்கள் மற்றும் ஏகாந்தப் பாடலை ஆத்ம சகோதரர் ஜாபார் அலி யாசீனி ஹக்கியுல்காதிரி மற்றும் முகம்மது MCA ஹக்கியுல்காதிரி பாடினார்கள். அதை தொடர்ந்து முதலாவதாக ஜாபார் அலி யாசீனி ஹக்கியுல்காதிரி குர்பானி உடைய சிறப்பை பற்றியும் அடுத்ததாக முகம்மது ஹாஷிம் ஹக்கியுல்காதிரி குருவின் அவசியம் பற்றியும் அடுத்ததாக ஜாபார் சாதிக் அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சிறப்பை பற்றியும் முகம்மது மீரான் ஹக்கியுல்காதிரி முடிவுரை நிகழ்த்தினார்கள் மேலும் கேள்வி - பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இறுதியாக தவ்பா பைத்துடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
சபை உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள். அனைவருக்கும் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.