Saturday, December 18, 2010

பிறை 14 ராத்திபு
குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பில் முஹர்ரம் மாத 14 பிறை ராத்திபு ஆத்ம சகோதரர் முஹம்மது ஹாஷிம் ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பிறை 1 முதல் 1௦ வரை இமாம் ஹஸன் (ரலி ) மற்றும் இமாம் ஹுசைன் (ரலி) அவர்களுடைய மவ்லிது சரீஃப் சபைப் பிள்ளைகளின் இல்லங்களில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஹுசைன்(ரலி) அவர்களின் கந்துாரி ‌கொண்டாடும் விதமாக ராத்திபு மஜ்லிஸை தொடர்ந்து ஆஷூரா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்ச்சிக்கு அ.முஹம்மது மீரான் ஹக்கிய்யுள் காதிரி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின் ஆரம்பமாக ஆத்ம சகோதரர் K.ஷபியுல்லாஹ் ஹக்கிய்யுள் காதிரி அவர்களின் மகன் ச.முஹம்மது உமர் கிராஅத் ஓதினார். நபிப்புகழ்பாவை ஆத்ம சகோதரர் ஜாஃபர் சாதிக் ஹக்கிய்யுள் காதிரி இனிமையாக பாடினார். வஹ்தத்துல் வுஜூது பாடலை ஆத்ம சகோதரர் தலைவர் மு.அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி மற்றும் ஆத்ம சகோதரர் மு.முபாரக் அலி ஹக்கிய்யுள் காதிரி பாடினார்கள். பேச்சாளர்களின் முதலாவதாக ஆத்ம சகோதரர் ஜ.அப்துல் அஜுஸ் உலவி,ஹக்கிய்யுள் காதிரி இமாம் ஹஸன் (ரலி) மற்றும் இமாம் ஹுசைன் (ரலி) அவர்களின் மவ்லிது சரீஃப்ல் உள்ள ஹிகயாதுள் இருந்து சிலவற்றை ‌விளக்கினார். அதை தொடர்ந்து இமாம் ஹஸன் (ரலி) இமாம் ஹுசைன் (ரலி) புகழ்பாடலை அமானுல்லாஹ் ஹக்கியுல்காதிரி மற்றும் அப்துல் ஹமீது ஹக்கியுல்காதிரி (பாகவி) பாடினார்கள். அடுத்ததாக ஆத்ம சகோதரர் அ.முஹம்மது மீரான் ஹக்கிய்யுள் காதிரி கர்பலாவிற்கான காரணங்களும் போரின் நிகழ்வுகளும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.



இறுதியாக தலைவர் மு.அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் நன்றியுரை நல்கினார்.

தவ்பா பைத்துடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

இறுதியில் கலந்து கொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.

Friday, December 10, 2010

வாழ்த்துக்கள்


சங்கைமிகு இமாம் ஜமாலிய்யா அஸ்சையது கலீல் அவுன்அல்ஹஸனியுல் ஹாஷிமி நாயகம் அவர்கள் தங்களின் திருஇல்லத்தில் துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் நிர்வாகத் தலைவர் A.P.சிஹாபுதீன் B.E., M.B.A ஹக்கியுல்காதிரி அவர்களை தங்களின் கலீபாவாக நியமித்துள்ளார்கள்.

குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபை சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரியபடுத்தி கொள்கின்றோம் .