Saturday, January 29, 2011

சங்கைமிகு இமாம் ஹஸன்(ரலி)அவர்களின் விசால் தின விழா



குவைத் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் ஸஃபர் மாதம் 28-1-2011 வெள்ளிக்கிழமை மாலை மஃக்ரிபிற்குப் பின் சங்கைமிகு இமாம் ஹஸன் (ரலி) அவர்களின் விசால் தினத்தினை நினைவு கூறும்பொருட்டு புனித மௌலிது ஷரீப் மிகச் சிறப்பாக ஓதப்பட்டது.



நிகழ்ச்சியின் ஆரம்பமாக அமானுல்லாஹ் ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இமாம் ஹஸன் (ரலி) மற்றும் இமாம் ஹுசைன் (ரலி) அவர்களின் புகழ்ப்பாடலை பாடினார்.



இறுதியாக ஆத்ம சகோதரர் அ.முஹம்மது மீரான் ஹக்கிய்யுள் காதிரி இமாம் ஹஸன் (ரலி) அவர்களைப் பற்றி சிறிது நேரம் பேசினார்.



இந்நிகழ்ச்சியை ஆத்ம சகோதரர் K.ஷபியுல்லாஹ் ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் ஆத்ம சகோதரர்கள் முபாரக் அலி, நத்ஹர்ஷா மற்றும் முகம்மது மீரான் அவர்களின் இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்தார்.

நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.

Sunday, January 23, 2011

இராத்திபத்துல் காதிரிய்யா


குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான மெய்ஞ்ஞானசபையில் ஜனவரி 21 வெள்ளிக்கிழமை மாலை மஃக்ரிபிற்குப் பின் ஸஃபர் மாத 14 பிறை ராத்திபு ஆத்ம சகோதரர் S.M.ஷபியுல்லாஹ் ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இஷா தொழுகைக்கு பின் மாதந்திரக் கூட்டம் நடைபெற்றது

தலைவர் முன்னிலையுடன், இந்த மாதக்கூட்டத்திற்கு பொதுச் செயலாளர் முஹம்மது M.C.A ஹக்கிய்யுள் காதிரி தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியின் ஆரம்பமாக ஆத்ம சகோதரர் தலைவர் மு.அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி கிராஅத் ஓதினார்.

நபிப்புகழ்பாவை ஆத்ம சகோதரர் ஜாஃபர் சாதிக் ஹக்கிய்யுள் காதிரி இனிமையாக பாடினார்.

வஹ்தத்துல் வுஜூது பாடலை ஆத்ம சகோதரர் தலைவர் மு.அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி மற்றும் ஆத்ம சகோதரர் மு.முபாரக் அலி ஹக்கிய்யுள் காதிரி பாடினார்கள்

பேச்சாளர்களின் முதலாவதாக ஆத்ம சகோதரர் ஜ.அப்துல் அஜுஸ் உலவி,ஹக்கிய்யுள் காதிரி பதுறு மவ்லிதின் சிறப்பைப் பற்றி உரையாற்றினார்.

அதைத் தொடர்ந்து ஜாபார் அலி யாசீனி ஹக்கியுல்காதிரி கொள்கை என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் .

இறுதியாக தலைவர் மு.அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் நன்றியுரை நல்கினார்.

தவ்பா பைத்துடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

இறுதியில் கலந்து கொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.