முஹிய்யுத்தீன் ஆண்டகையின் உபதேசம்!!!
المقالة:
قـال رضـي الله تـعـالى عـنـه و أرضـاه : إذا وصلت إلى الله قربت بتقريبه وتوفيقه، ومعنى الوصول إلى الله عزَّ وجلَّ خروجك عن الخلق والهوى والإرادة والمنى, والثبوت مع فعله ومن غير أن يكون منك حركة فيك ولا في خلقه بك، بل بحكمه وأمره وفعله, فهي حالة الفناء يعبر عنها بالوصول
உபதேசம்:
அப்துல் காதிர் ஜீலானி (ரலி) கூறினார்கள்: அல்லாஹ்வை நெருங்கி, அவன் கவர்ச்சியாலும் உதவியாலும் அவனுக்கு அருகில் ஆகும்போது- அதாவது நீ படைப்புகளையும், உன் ஆசையையும், நோக்கத்தையும் விட்டு அப்பாலகி அவன் செயலிலும், நோக்கத்திலும் இணைந்தவனாகி, அதில் அவன் உத்தரவோ, செயலோ, கட்டளையோ இன்றி உன்னிடமோ உன் மூலமோ எந்த அசைவுமே இல்லாது ஆகும் அந்த சந்நிதான நிலை எய்தியதும், ('பனா' என்ற) நாஸ்தி நிலையை நீ அடைந்துவிடுகிறாய்.