முஹிய்யுத்தீன் ஆண்டகையின் உபதேசம்!!!
المقالة:
قـال رضـي الله تـعـالى عـنـه و أرضـاه :فكم من نعمة عندك وأنت لا تعرفها؟؟ لا تسكن إلى أحد من الخلق, ولا تستأنس به, ولا تطلع أحداً على ما أنت فيه, بل يكون أنسك بالله عزَّ وجلَّ، وسكونك إليه وشكواك منه وإليه لا ترى ثانياً, فإنه ليس لأحد ضر ونفع, ولا جلب ولا دفع, ولا عزَّ ولا ذل, ولا رفع ولا خفض, ولا فقر ولا غنى, ولا تحريك ولا تسكين, الأشياء كلها خلق الله عزَّ وجلَّ وبيد الله عزَّ وجلَّ، بأمره وإذنه جريناها, وكل يجري لأجل مسمى, وكل شيء عنده بمقدار, لا مقدم لما أخر, ولا مؤخر لما قدم"
உபதேசம்:
அப்துல் காதிர் ஜீலானி (ரலி) கூறினார்கள்: உன்னிடம் அவன் அருட்கொடைகள் எத்தனை இருக்கின்றன, ஆனால், நீ அவற்றை உணர்வதில்லை. சிருஷ்டிகளிலுள்ள எதனாலும் நீ ஆறுதல் பெற்றவனாக ஆகி விடாதே; அவற்றில் பற்றுதல் வையாதே, உன் நிலையை யாரிடமும் சொல்லவும் வேண்டாம், சர்வ புகழுக்கும் சக்திக்கும் உரிமையாளனான அல்லாஹ்விடமே நீ பற்றுதல் கொள்ள வேண்டும்; அவனிடமே ஆறுதல் தேட வேண்டும்; அவன் மீது நீ கொண்டுள்ள குறைபாடுகளை அவனிடமே தெரிவி. வேறு யாரையும் நீ எதிர்நோக்க வேண்டாம், ஏனெனில், வேறு எதிலும் நல்லது-கெட்டது, கைப்பற்றல்-கைவிடல், கௌரவம்-அகௌரவம், ஏற்றம்-இறக்கம், வறுமை-வளம், அசைவு-ஸ்தம்பிதம் ஆகியவை இல்லை. யாவுமே அல்லாஹ்வால் சிருஷ்டிக்கப்பட்டவை; இவற்றின் இயக்கம், அவன் உத்தரவையும் அனுமதியையும் கொண்டு நடப்பதாய், அவன் கைக்குள் அடங்கியதுதான். அவன் குறித்துள்ள காலம்வரை அவை இயங்கும். அவன் நிர்ணயித்து உள்ள கால அளவு வரையே யாவும் தரிப்பட்டிருக்கும். அவன் முன்னரேயே செய்தவை முன்பே உள்ளவை என்றோ, பின்பு செய்தவை பின் உண்டானவை என்றோ கூறிவிட முடியாது. உனக்கு ஏதாவது சங்கடம் உண்டாக்க அல்லாஹ் நாடுவானேயாயின், அவனைத் தவிர வேறு யாராலும் அதைத்தடுக்க முடியாது. அவன் நன்மை செய்ய நாடுவானாயினும் அதையும் யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது.