Saturday, September 17, 2011

காலத்தின் உத்தமரின் உதயதின விழா!!!

எம்பெருமானார் அவர்களின் திருப்பேரர், காலத்தின் அதிபதி, காமில் ஷைக், குதுபுஜ் ஜமான், ஷம்சுல் வுஜூத், லிஸானுல் ஹக் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் அல்ஹஸனிய்யுள் ஹுசைனிய்யுள் ஹாஷிமிய் மௌலானா நாயகம் அவர்களின் 76 ஆவது உதயதினத்தை முன்னிட்டு குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையின் சார்பில் ஆத்ம சகோதரர் P.T.M. அப்துல் ஹமீது ஹக்கிய்யுள் காதிரி அவர்களின் இல்லத்தில் உதயதின விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

ரசூலே கரீம் (ஸல்) அவர்களின் புகழ் பாக்களான சுப்ஹான மௌலிது ஓதி விழா இனிதே ஆரம்பமாகியது.

இச்சிறப்புமிகு விழாவை கிராத் ஓதி துவங்கி வைக்கிறார் ஆத்ம சகோதரர் நத்ஹர்ஷா ஹக்கிய்யுள் காதிரி.

ஏகாந்தப் பாடல் - ஆத்ம சகோதரர் Eng. ஹிதாயத்துல்லாஹ் ஹக்கிய்யுள் காதிரி மற்றும் ஆத்ம சகோதரர் முபாரக் அலி ஹக்கிய்யுள் காதிரி.

வஹ்ததுல் வுஜூத் - ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி மற்றும் ஆத்ம சகோதரர் முபாரக் அலி ஹக்கிய்யுள் காதிரி.

நபிப் புகழ்பா - ஆத்ம சகோதரர் முபாரக் அலி ஹக்கிய்யுள் காதிரி.

தலைமை உரை தலைவர் ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி அவர்கள்.

குருநாதரின் சொல் கேட்போம் - ஆத்ம சகோதரர் முஹம்மது ஹக்கிய்யுள் காதிரி.

ஷைகுநாயகம் அவர்களின் வெளிப்பாடு - ஆத்ம சகோதரர் Eng. ஹிதாயத்துல்லாஹ் ஹக்கிய்யுள் காதிரி.

குருவை கண்ணியப்படுத்துதல் - ஆத்ம சகோதரர் முபாரக் அலி ஹக்கிய்யுள் காதிரி.

நாமும் பெறுவோம் பிறந்தநாள் வாழ்த்து - கவிதை - ஆத்ம சகோதரர் ஷபியுல்லாஹ் ஹக்கிய்யுள் காதிரி.

மார்க்கச் சட்டங்களில் நம் குருநாதர் - ஆத்ம சகோதரர் P.T.M. அப்துல் ஹமீது ஹக்கிய்யுள் காதிரி.

மார்க்கச் சட்டங்களில் சிறிதும் பிசகாத நம் சர்குருநாயகம் - ஆத்ம சகோதரர் முஹம்மது ஹாஷிம் ஹக்கிய்யுள் காதிரி.

வாப்பாவிடம் நம்மை ஒப்படைக்கவேண்டும் - ஆத்ம சகோதரர் நத்ஹர்ஷா ஹக்கிய்யுள் காதிரி.

நாயகம் (ஸல்) அவர்களின் குணங்களை அப்படியே பெற்றவர்கள் நம் ஷைகுநாயகம் - ஆத்ம சகோதரர் அப்துல் அஜீஸ் உலவி ஹக்கிய்யுள் காதிரி.

சர்குருநாதர் அவர்களின் வாரிதாதிலிருந்து ஒரு பாடல் - ஆத்ம சகோதரர் முஹம்மது மீரான் ஹக்கிய்யுள் காதிரி.

அஹ்லுல் பைத்துக்களின் சிறப்பு - ஆத்ம சகோதரர் முஹம்மது மீரான் ஹக்கிய்யுள் காதிரி.

நன்றி உரை - தலைவர் ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி.

இச்சிறப்புமிகு விழாவில் கலந்துகொண்ட முரீதீன்கள் மற்றும் அஹ்பாப்கள்.

தவ்பா பைத்துடன் இனிதே இவ்விழா நிறைவு பெற்றது, கலந்துகொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.

Monday, September 12, 2011



இராத்திபத்துல் காதிரிய்யா!!! Align Center

குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் செப்டம்பர் 9 அன்று பிறை 14 இராத்திபு மஜ்லிஸ் மஃரிப் தொழுகைக்குப் பின்னர் நடைபெற்றது

அதைத் தொடர்ந்து சங்கைக்குரிய ஷைகு நாயகம் அவர்களின் மாதத்தை சிறப்பிக்கும் முகமாக, சங்கைக்குரிய ஷைகு நாயகம் அவர்களின் ஞான வெளிப்பாடான கஸீதத்துல் அஹ்மதிய்யா மற்றும் கஸீதத்துல் அவ்னிய்யா ஓதப்பட்டது.






இறுதியில் கலந்து கொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.