Sunday, January 8, 2012

இராத்திபத்துல் காதிரிய்யா!!!
குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் ஜனவரி 6 வெள்ளிக்கிழமை மக்ஹ்ரிப் பிறகு பிறை 14 ராத்திபு மஜ்லிஸ் மற்றும் மாதந்திரக் கூட்டம் ஆத்ம சகோதரர் P.T.M. அப்துல் ஹமீது அவர்களின் இல்லத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு சபைத் தலைவர் ஆத்ம சகோதரர் மு.அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியின் ஆரம்பமாக கிராத் ஆத்ம சகோதரர் நத்ஹர்ஷா ஹக்கிய்யுள் காதிரி ஏகாந்தப் பாடல் - ஆத்ம சகோதரர் ஜாபர் அலி யாசினிய் மற்றும் ஆத்ம சகோதரர் முஹம்மது மீரான் ஹக்கிய்யுள் காதிரி வஹ்ததுல் வுஜூத் - ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி மற்றும் ஆத்ம சகோதரர் முபாரக் அலி ஹக்கிய்யுள் காதிரி. நபிப் புகழ்பா - ஆத்ம சகோதரர் ஆத்ம சகோதரர் மு.அப்துல் ஹமீது ஹக்கிய்யுள் காதிரி தலைமை உரை தலைவர் ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி அவர்கள். ஆத்ம சகோதரர் முஹம்மது மீரான் ஹக்கிய்யுள் காதிரி உரை ஆத்ம சகோதரர் முஹம்மது ஹக்கிய்யுள் காதிரி உரை இறுதியில் கலந்து கொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.