Wednesday, April 11, 2012








சங்கைமிகு செய்கு நாயகம் அவர்களின் அருள் வருகை!
தரீகத்துல் ஹக்கிய்யதுல் காதிரிய்யாவின் காமில் ஷைகு, மெய்ஞான ஜோதி, குத்புஸ்ஸமான், ஷம்ஸுல் வுஜூத், இமாம் ஜமாலிய்யா அஸ்ஸையித் கலீல் அவ்ன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்கள் 9 .4 .2012 திங்கள் மதியம்  2.10 மணியளவில் குவைத்துக்கு நான்கவது  வருட விஜயமாக வருகை புரிந்தார்கள்.

சங்கைமிகு ஷைகுநாயகம் அவர்களை குவைத் ஏகத்துவ மெய்ஞான சபைத் தலைவர் M. அப்துல் ஹமீத் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்களின் தலைமையில் விமான நிலையம் சென்று சபை உறுப்பினர்கள், முரீதீன்கள், அஹ்பாப்கள் மிக்க ஆவலுடன் வரவேற்றனர். ஏகத்துவ மெய்ஞான சபைக்கு வருகை புரிந்த சங்கைமிகு செய்கு நாயகம் அவர்களை முரீத்கள் மிக்க உற்சாகத்துடன் சலாம்  பைத்தைப் பாடி சந்தன மாலைகள் அணிவித்து அழகிய மலர்ச்செண்டு அளித்து வரவேற்றனர்.