Friday, January 24, 2014
Meelad Function at Kuwait on 24-1-2014
Live streaming video by Ustream Kuwait Meelad celebration will be started at 5:30 PM till 8:00 PM, on 24-Jan-2014.
Wednesday, January 15, 2014
இராத்திபத்துல் காதிரிய்யா
ஹதீஸ்:عن جابر بن سمرة رضى الله عنه قال : قال رسول الله صلّى الله عليه وسلّم : إنّى لأعرف حجراً بمكة كان يسلّم علىّ قبل أن أبعث، إنّى لأعرفه الآن- مسلم 5653
ஜாபிர் இப்னு ஸம்ரா (ரலி) அறிவித்தார்கள்,நபிகள் கோமான் (ஸல்) அவர்கள் கூறினார்கள், நான் நபியாக அனுப்பப் படுவதற்கு முன்பாகவே மக்காவில் உள்ள ஒரு கல் எனக்கு வழக்கமாக சலாம் உரைப்பதை நான் அறிவேன், இப்பொழுதும் அதை நான் காண்கின்றேன். முஸ்லிம் - 5653 .
குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையின் சார்பாக கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் மாதமான ரபீவுள் அவ்வள் பிறை-14 முன்னிட்டு அவர்களின் சிறப்புகளை போற்றும் சுப்ஹான மௌலிது மற்றும் பிறை 14 ராத்திபு
ஆத்ம சகோதரர் ஜாபார் அலி யாசினிய் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.
பன்னிரண்டு நாளிதே பதிபிறந்த நாளிதே!!!
அல்குர் ஆன்:நிச்சயமாக அல்லாஹுவும் அவனது மலக்குகளும் நபி(கள் பெருமானார்) மீது ஸலவாத் சொல்கின்றனர். ஓ (ஈமான் கொண்ட) விசுவாசிகளே நீங்களும் நபிமீது ஸலவாத்தும் ஸலாமும் சொல்வீர்களாக. அல்குர் ஆன் 33 :56
ஹதீஸ்:உபை இப்னு கஃபு (ரலி) கூறுவதாவது: யா ரசூலல்லாஹ்! நான் உங்கள் மீது அதிகமாக ஸலவாத்துச் சொல்ல விரும்புகிறேன். நான் (துஆக்களுக்காக ஒதுக்கியுள்ள நேரத்தில்) எவ்வளவு அதற்காக ஒதுக்கலாம்? என நாயகம் (ஸல்) அவர்களிடம் வினவினேன். உமது விருப்பம் போல என்று அன்னார் பதிலளித்தார்கள். கால் பாகத்தை ஒதுக்கட்டுமா? என்றேன். உம் விருப்பம்போல செய்வீர். ஆனால் அதிகப்படுத்துவது உமக்கு நல்லது என்றார்கள். மூன்றில் இரண்டு பாகத்தை ஒதுக்கட்டுமா? என்றேன். உமது விருப்பம்போல செய்வீர். அதனினும் அதிகப்படுத்தினால் உமக்குத்தான் நல்லது என்றார்கள். எனது ஒதுக்கப்பட்ட நேரம் அனைத்தையும் ஸலவாத்துக்கே விட்டு விடட்டுமா? என்றேன். அப்படிச் செய்தால் உமது கவலைகள் அனைத்திற்கும் போதுமானதாக இருக்கும். உமது பாபங்களுக்குப் பரிகாரமான தாகவுமிருக்கும் என்றார்கள்.(திர்மதி, அஹ்மத், ஹாக்கிம்).
குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையின் சார்பாக கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் மாதமான ரபீவுள் அவ்வள் பிறை-12 முன்னிட்டு அவர்களின் சிறப்புகளை போற்றும் சுப்ஹான மௌலிது ஷரீப் ஆத்ம சகோதரர் ஜாபார் அலி யாசினிய் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.