Sunday, April 10, 2011

அப்பா நாயகம் (ரலி) அவர்களின் கந்தூரிப் பெருவிழா!!!

குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் 08/04/2011 வெள்ளிகிழமை மஃஹ்ரிப் தொழுகைக்குப் பின்னர் சங்கைக்குரிய நமது செய்கு நாயகத்தின் பாட்டனார், பாம்பு மௌலானா என்று சம்பை வாழ் மக்களால் அழைக்கப்பட்ட செய்கு ஜமாலிய்யா செய்யிது முஹம்மது மௌலானா அல்ஹஸனியுல் ஹாஷிமிய் (ரலி) அவர்களின் 62வது புனித கந்தூரி விழாவை முன்னிட்டு இராத்திபத்துல் காதிரிய்யா ஓதப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் முரிதீன்கள் கலந்து சிறப்பித்தார்கள். நிர்வாகத் தலைவர் மு.அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி உரைநிகழ்த்தினார் நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.