15 .4 .2011 வெள்ளி மாலை மக்ரிப் தொழுகைக்குப்பின் தரீகத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா ராத்திபு மஜ்லிஸ் நடைபெற்றது. சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்கள் தலைமை ஏற்று ஓதி நடத்திய இந்த பேரின்ப மஜ்லிஸில் முரீதீன்கள் அஹ்பாப்கள் மற்றும் துபாய் ஏகத்துவ மெய்ஞான சபைத் தலைவர் கலீபா A.P. சஹாபுத்தீன் B.E.,M.B.A., மற்றும் இந்தியாவின் தமிழகத்தில் இருந்து வந்திருந்த கலீபா ஆலிம் புலவர் S. ஹுஸைன் முஹம்மது மன்பஈ மற்றும் துபையைச் சேர்ந்த காதிமுஷ்ஷைகு M. அக்பர் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தினமும் ஸுபுஹ் தொழுகைக்குப்பின்னும் மக்ரிப் தொழுகைக்குப்பின்னும் சங்கைமிகு செய்கு நாயகம் அவர்களின் ஞான விளக்க மஜ்லிஸ் நடைபெற்று வருகிறது.