Sunday, May 15, 2011

இராத்திபத்துல் காதிரிய்யா

குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான மெய்ஞ்ஞானசபையில் மே 13 வெள்ளிக்கிழமை மாலை மஃக்ரிபிற்குப் பின் 14 பிறை ராத்திபு ஆத்ம சகோதரர் S.M.ஷபியுல்லாஹ் ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து மாதாந்திரக் கூட்டம் தலைவர் முன்னிலையுடன், சபையின் கௌரவ ஆலோசகர் ஆத்ம சகோதரர் P.T.M.அப்துல் ஹமீது ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் தலைமை தாங்கினார்.

ஆத்ம சகோதரர் தலைவர் மு.அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் கிராஅத் ஓதி கூட்டத்தை இனிதே துவங்கிவைத்தார்.

வஹ்தத்துல் வுஜூது பாடலை ஆத்ம சகோதரர் தலைவர் மு.அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி மற்றும் ஆத்ம சகோதரர் மு.முபாரக் அலி ஹக்கிய்யுள் காதிரி பாடினார்கள்.

நபிப்புகழ்பாவை ஆத்ம சகோதரர் மு.முபாரக் அலி ஹக்கிய்யுள் காதிரி மற்றும் ஆத்ம சகோதரர் அமானுல்லாஹ் ஹக்கிய்யுள் காதிரி பாடினார்கள்.

பேச்சாளர்களில் முதலாவதாக ஆத்ம சகோதரர் Er.ஹிதாயத்துல்லாஹ் ஹக்கிய்யுள் காதிரி இராத்திபத்துல் காதிரிய்யாவின் சிறப்பைப் பற்றி உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து ஆத்ம சகோதரர் நத்ஹர்ஷா ஹக்கிய்யுள் காதிரி நமது சங்கைக்குரிய சர்குரு நாயகம் அவர்கள் குவைத் விஜயத்தின் போது அருளிய உரைகளில் இருந்து சில விஷயங்களை எடுத்துரைத்தார்.

இறுதியாக குவைத்திற்கு வருகை புரிந்துள்ள திருச்சியைச் சேர்ந்த ஆத்ம சகோதரர் H. அப்துல் கரீம் ஆலிம் ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் ஜமாலிய்யா மௌலானா நாயகம், யாஸீன் மௌலானா நாயகம், கண்ணாடி அவ்லியா நாயகம் மற்றும் நமது வாப்பா நாயகம் ஆகியோரின் சிறப்புக்களைப் பற்றி சிறிது நேரம் உரையாற்றினார்கள்.

தவ்பா பைத்துடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது. இறுதியில் கலந்து கொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது