Friday, April 1, 2011

முஹிய்யுத்தீன் ஆண்டகையின் உபதேசம்!!!

المقالة:

قـال رضـي الله تـعـالى عـنـه و أرضـاه :إنما هو الله ونفسك وأنت المخاطب، والنفس ضد الله وعدوه, والأشياء كلها تابعة لله, والنفس له خلقاً ومُلكاً, وللنفس ادعاء وتمن وشهوت ولذة بملابستها, فإذا وافقت الحق عزَّ وجلَّ في مخالفة النفس وعدوانها فكنت لله خصماً على نفسك كما قال الله عزَّ وجلَّ لداود عليه السلام : "يا داود أنا بدك اللازم فألزم بدك، العبودية أن تكون خصماً على نفسك"

உபதேசம்:

அப்துல் காதிர் ஜீலானி (ரலி) கூறினார்கள்: நிச்சயமாக, அல்லாஹ்வும் உன் கீழான மனமும் தவிர வேறு எதுவுமே இல்லை. நீ அல்லாஹ்விடம் முறையிடுபவன்; உன் கீழான மனமோ அவனுக்கு எதிராக நிற்பது. ஆனால், சகலமுமே அவனுக்குக் கீழ்பட்டவையானபடியால், அவனால் சிருஷ்டிக்கப்பட்ட அந்த கீழான மனமும் அவனுக்குக் கீழ்ப்பட்டதுதான். மனிதனின் மனமோ தானே முடிவுகளை உண்டாக்கிக் கொள்கிறது; அதனால் தவறான நம்பிக்கைகளும், உணர்ச்சிகளும், போக இச்சையும் கிளர்ந் தெழுகின்றன. இந்தக் கீழான மனத்தை நீ எதிர்த்துப் போராடி சத்தியத்தின் பக்கம் சேர்ந்தால் நீ அல்லாஹ்வுக்கு உரியவனாவாய்; 'தன்னை' விட்டும் தப்பியவனாவாய். தாவூத் நபி (அலை) அவர்களிடம் அல்லாஹ் சொன்னான்: "தாவூதே, நான் தடுக்க இயலாத உமது புகலிடமாவேன்; எனக்காக உம கீழான மனதுக்கு அகப்படாதவராக நீர் ஆவதன் மூலம் தான் நீர் உண்மையான சேவைக்கு உரியவராவீர்" என்று.