المقالة:
قـال رضـي الله تـعـالى عـنـه و أرضـاه :لا تدع حالة القوم يا صاحب الهوى أنت تعبد الهوى وهم عبيد المولى, أنت رغبتك في الدنيا ورغبة القوم في العقبى, أنت ترى الدنيا وهم يرون ربّ الأرض والسماء, وأنت أنسك بالخلق وأنس القوم بالحق، أنت قلبك متعلق بمن في الأرض وقلوب القوم بربّ العرش, أنت يصطادك من ترى وهم لا يرون من ترى بل يرون خالق الأشياء وما يرى, فاز القوم به وحصلت لهم النجاة, وبقيت أنت مرتهناً بما تشتهي من الدنيا وتهوى، فنوا عن الخلق والهوى والإرادة والمنى فوصلوا إلى الملك الأعلى"
உபதேசம்:
அப்துல் காதிர் ஜீலானி (ரலி) கூறினார்கள்: ஓ, புலன் நுகர்ச்சியின் அடிமையே, அல்லாஹ்வின் அடியார்களின் ஸ்தானத்தை நீ வேட்காதே; நீ உன் புலன் நுகர்சிக்குச் சேவை செய்கிறாய்; அவர்களோ அல்லாஹ்வைத் தொழுதேத்துபவர்கள், உன் ஆசையோ இவ்வுலகின்மீது; அவர்கள் ஆசையோ வரப்போகிற உலகின்மீதுதான். நீ இவ்வுலகைக் காண்கிறாய்; அவர்கள் காண்பதோ இப்பூமிக்கும் வானத்துக்கும் உரிய இறைவனையாகும். உன் சுகம் சிருஷ்டிகளிடம் இருக்கிறது; அவர்கள் சுகமோ அல்லாஹ்விடமுள்ளது. உன் இதயம் இப்பூமியில் உள்ள பொருள்களால் பந்தப் பட்டுள்ளது. அவர்கள் உள்ளங்களோ அல்லாஹ்வின் ஆட்சி பீடத்தே பந்தப்பட்டுள்ளன. நீ கண்டதை காட்சி என்றெண்ணி அதற்குப் பலியாகிறாய்; அவர்களோ நீ காண்பவற்றைக் காணார்கள்; ஆனால், (இக்கண்களால்) காணமுடியாத ரட்சகனையே காண்கிறார்கள். நீ இவ்வுலக இச்சைகளுக்கு இரையாகிக் கிடந்து உழல்கிறாய்; அவர்களோ தம் வாழ்க்கை லட்சியத்தை எய்துகிறார்கள்; தங்களுக்கு ஈடேற்றத்தைத் தேடிக் கொள்கிறார்கள்.