பிறை-7
நாயகத்தின் திருப்பார்வை:
ஹதீஸ்
حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن أبى الزّناد عن الأعرج عن أبى هريرة أنّ رسول الله صلى الله عليه وسلم قال: (( هل ترون قبلتى هاهنا ؟ فوالله ما يخفى علىّ خشوعكم ولا ركوعكم ، إنّى لأراكم من وراء ظهرى )) بخارى - 418
அபூ ஹுரைராஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்,நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:நான் கிப்லா திசையில் மட்டும் பார்க்கின்றேன் என்று நீங்கள் கருதுகிறீர்களா? அல்லாஹ்வின் மீது ஆணையாக நீங்கள் அடக்கமாக இருப்பதும் உங்களின் ருகூவும் எனக்குத் தெரியாமல் இருப்பதில்லை. நிச்சயமாக என்னுடைய முதுகுக்குப் பின் புறம் உங்களை நான் பார்க்கிறேன். புஹாரி - 418.
குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையின் சார்பாக கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் மாதமான ரபீவுள் அவ்வள் பிறை-7 முன்னிட்டு அவர்களின் சிறப்புகளை போற்றும் சுப்ஹான மௌலிது ஷரீப் ஆத்ம சகோதரர் ஜாபார் அலி யாசினிய் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.