பிறை-6
ஹதீஸ்:أنس بن مالك رضى الله عنه أنه قال : رأيت رسول الله صلّى الله عليه وسلّم وحانت صلاة العصر، فالتمس الوضوء فلم يجدوه، فأتى رسول الله صلّى الله عليه وسلّم بوضوء فوضع رسول الله صلّى الله عليه وسلّم يده فى ذلك الإناء فأمر النّاس أن يتوضّئوا منه، فرأيت الماء ينبع من تحت أصابعه، فتوضأ النّاس حتّى توضّئوا من عند آخرهم – بخارى3573
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்கள், (ஒரு நாள்) நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்தேன். அப்போது அஸர் தொழுகையின் நேரம் வந்து விட்டுருந்தது. உளூச் செய்யும் தண்ணீரைத் தேடியும் அவர்களுக்கு அது கிடைக்க வில்லை. இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம், உளூச் செய்யும் தண்ணீர் (சிறிது) கொண்டு வரப்பட்டது. இறைத்தூதர் (ஸல்) அந்தப் பாத்திரத்தில் தம் திருக்கரத்தை வைத்தார்கள் பிறகு, அதிலிருந்து உளூச் செய்யும்படி மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களின் விரல்களுக்குக் கீழேயிருந்து தண்ணீர் ஊற்றெடுத்துப் பொங்கி வருவதை கண்டேன். மக்கள் (அதிலிருந்து) உளூச் செய்தார்கள். எந்த அளவிற்கென்றால் அவர்களில் கடைசி நபர் வரை (அதிலேயே) உளூச் செய்து முடித்தார்கள். புகாரி - 3573
குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையின் சார்பாக கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் மாதமான ரபீவுள் அவ்வள் பிறை-6 முன்னிட்டு அவர்களின் சிறப்புகளை போற்றும் சுப்ஹான மௌலிது ஷரீப் ஆத்ம சகோதரர் ஜாபார் அலி யாசினிய் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.