Sunday, January 27, 2013

பன்னிரண்டு நாளிதே பதிபிறந்த நாளிதே!!!


அல்குர் ஆன்:நிச்சயமாக அல்லாஹுவும் அவனது மலக்குகளும் நபி(கள் பெருமானார்) மீது ஸலவாத் சொல்கின்றனர். ஓ (ஈமான் கொண்ட) விசுவாசிகளே நீங்களும் நபிமீது ஸலவாத்தும் ஸலாமும் சொல்வீர்களாக. அல்குர் ஆன் 33 :56

ஹதீஸ்:
உபை இப்னு கஃபு (ரலி) கூறுவதாவது: யா ரசூலல்லாஹ்! நான் உங்கள் மீது அதிகமாக ஸலவாத்துச் சொல்ல விரும்புகிறேன். நான் (துஆக்களுக்காக ஒதுக்கியுள்ள நேரத்தில்) எவ்வளவு அதற்காக ஒதுக்கலாம்? என நாயகம் (ஸல்) அவர்களிடம் வினவினேன். உமது விருப்பம் போல என்று அன்னார் பதிலளித்தார்கள். கால் பாகத்தை ஒதுக்கட்டுமா? என்றேன். உம் விருப்பம்போல செய்வீர். ஆனால் அதிகப்படுத்துவது உமக்கு நல்லது என்றார்கள். மூன்றில் இரண்டு பாகத்தை ஒதுக்கட்டுமா? என்றேன். உமது விருப்பம்போல செய்வீர். அதனினும் அதிகப்படுத்தினால் உமக்குத்தான் நல்லது என்றார்கள். எனது ஒதுக்கப்பட்ட நேரம் அனைத்தையும் ஸலவாத்துக்கே விட்டு விடட்டுமா? என்றேன். அப்படிச் செய்தால் உமது கவலைகள் அனைத்திற்கும் போதுமானதாக இருக்கும். உமது பாபங்களுக்குப் பரிகாரமான தாகவுமிருக்கும் என்றார்கள்.(திர்மதி, அஹ்மத், ஹாக்கிம்).









 
குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையின் சார்பாக கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் உதய தினமான ரபீவுள் அவ்வள் பிறை-12 முன்னிட்டு அவர்களின் சிறப்புகளை போற்றும் சுப்ஹான மௌலிது ஷரீப் ஆத்ம சகோதரர் ஜாபார் அலி யாசினிய்  அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. அநேகமான முரீதீன்கள் மற்றும் அஹ்பாப்கள் கலந்து கொண்டு ஈருலக பேறுகளையும் பெற்றனர்.

நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.