ஹதீஸ்:ஜாபர் (ரலி) அறிவித்தார்கள்,உம்மு மாலிக் அவர்கள் நாயகம் ( ஸல்) அவர்களுக்கு ஒரு தட்டில் நெய் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார், அவர்களுடைய குழந்தைகள் சாப்பிடுவதற்காக ஏதாவது கேட்கும் போதெல்லாம் எந்த தட்டில் நாயகத்திற்கு நெய் கொடுத்து வந்தாரோ அதில் பார்த்தால் தட்டு நிறைய நெயையை பெற்றுக் கொள்வார்கள், இதே வழக்கமாக இருந்து வந்தது, எதுவரை என்றால் அவர்கள் அந்த தட்டை சுத்தமாக வழித்து எடுக்கும் வரையில். அவர்கள் நாயகத்திடம் சென்று இது பற்றிக் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அதை முழுமையாக துடைத்து எடுத்தீர்களா? என்று வினவினார்கள். ஆம் என்றார். நீங்கள் அவ்வாறு செய்து இருந்திருந்தால் இறுதி வரையில் அது வழங்கிக்கொண்டே இருந்திருக்கும் என்று அருளினார்கள். முஸ்லிம் - 5660.
குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையின் சார்பாக கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் மாதமான ரபீவுள் அவ்வள் பிறை-15 முன்னிட்டு அவர்களின் சிறப்புகளை போற்றும் சுப்ஹான மௌலிது ஷரீப் ஆத்ம சகோதரர் ஜாபார் அலி யாசினிய் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.