Monday, April 14, 2014

இராத்திபத்துல் காதிரிய்யா

குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில் 13 .4 .2014 மாலை மக்ரிப் தொழுகைக்குப்பின் தரீகத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா ராத்திபு மஜ்லிஸ் நடைபெற்றது.

சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்கள் தலைமை ஏற்று ஓதி நடத்திய இந்த பேரின்ப மஜ்லிஸில் முரீதீன்கள் அஹ்பாப்கள்  ஆகியோர் கலந்து கொண்டனர்.



















நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது

குவைத் மஜ்லிஸ் - 2

குவைத் மஜ்லிஸ் - 1

Wednesday, April 9, 2014

ஷெய்கு நாயகம் 6-ம் ஆண்டு குவைத் வருகை

சங்கைமிகு செய்கு நாயகம் அவர்களின் அருள் வருகை!




தரீகத்துல் ஹக்கிய்யதுல் காதிரிய்யாவின் காமில் ஷைகு, மெய்ஞான ஜோதி, குத்புஸ்ஸமான், ஷம்ஸுல் வுஜூத், இமாம் ஜமாலிய்யா அஸ்ஸையித் கலீல் அவ்ன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்கள் 7 .4 .2014 1  மணியளவில் குவைத்துக்கு 6 வது  வருட விஜயமாக வருகை புரிந்தார்கள்.

சங்கைமிகு ஷைகுநாயகம் அவர்களை குவைத் ஏகத்துவ மெய்ஞான சபைத் தலைவர் M. அப்துல் ஹமீத் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்களின் தலைமையில் விமான நிலையம் சென்று சபை உறுப்பினர்கள், முரீதீன்கள், அஹ்பாப்கள் மிக்க ஆவலுடன் வரவேற்றனர். ஏகத்துவ மெய்ஞான சபைக்கு வருகை புரிந்த சங்கைமிகு செய்கு நாயகம் அவர்களை முரீத்கள் மிக்க உற்சாகத்துடன் சலாம்  பைத்தைப் பாடி  வரவேற்றனர்.