நான் பத்ருப் போரின்போது (படை) அணியில் நின்று கொண்டிருந்தேன். திரும்பிப் பார்த்தபோது என் வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் இளவயதுடைய இரண்டு இளைஞர்கள் (நின்று கொண்டு) இருந்தனர்.அந்த இருவர் (அருகில்) இருப்பது குறித்து நான் அஞ்சினேன். அப்போது அந்த இருவரில் ஒருவர் தம் தோழரிடமிருந்து மறைவாக என்னிடம், என் பெரிய தந்தையே! அபூ ஜஹ்லை எனக்குக் காட்டுங்கள் என்று கூறினார். அப்போது நான் என் சகோதரர் மகனே! அவனை என்ன செய்யப் போகிறாய்? என்று கேட்டேன். அதற்கு அவர், அவனை நான் கண்டால் (ஒன்று) அவனை நான் கொலை செய்வேன் அல்லது அதற்காக (ப் போராடி) மடிவேன் என்று அல்லாஹ்விடம் சபதம் எடுத்துக் கொண்டுள்ளேன் என்றார். அப்போது மற்றொருவரும் தம் சகாவிடமிருந்து மறைவாக, முதலாமவரைப் போன்றே கூறினார்.அவர்களைப் போன்ற இருவருக்கிடையே நான் இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. எனவே, அவ்விருவருக்கும், அபூ ஜஹ்லை சமிக்கை செய்து காட்டினேன். அந்த இருவரும் இராஜாளிப் பறவைகள் போன்று பாய்ந்து அவனைப் பலமாகத் தாக்கினர். அந்த இருவரும் அஃப்ரா வின் இரண்டு புதல்வர்கள் ஆவர். புகாரி 3988.
குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையின் சார்பாக கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் மாதமான ரபீவுள் அவ்வள் பிறை-16 முன்னிட்டு அவர்களின் சிறப்புகளை போற்றும் சுப்ஹான மௌலிது ஷரீப் ஆத்ம சகோதரர் ஜாபார் அலி யாசினிய் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.